தமிழ் உலக சினிமா
    


செய்திகள் - 2018
ரஜினிகாந்த் டார்ஜிலிங்கில் இருந்து சென்னை திரும்பினார்
காலா படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் சென்றிருந்தனர்.

அங்கு படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

அவருக்கு ரசிகர்கள் உற்சாக மிகுந்த வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.